கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் 30,732 பேர் பிளஸ்டூ தேர்வெழுதினர்: ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தேர்வினை ஆய்வு

News image
Updated On :5 மார்ச் 2015, 11:29 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தேர்வினை ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வான பிளஸ்டூ தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கடலூரில் உள்ள நகராட்சி பள்ளி, புனித வளனார் பள்ளி ஆகியவற்றில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பிளஸ்டூ தேர்வு வருகிற மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாவட்டத்தில் 191 பள்ளிகள், 80 தேர்வு மையங்கள் மூலம் 12,989 மாணவர்களும், 15,303 மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதை தவிர தனித்தேர்வுகள் 2,440 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் 30,732 பேர் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வினை கண்காணிக்க 1500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை தவிர 160 நிலைப்படையினரும், 80 முதன்மை காண்காணிப்பாளர், 80 துறை அலுவலர்கள், 80 கூடுதல் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை முன்னிட்டு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் எந்தவித அச்சமின்றி தேர்வை எழுதி தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை

தெரிவித்துக்கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.

ஆட்சியருடன் ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, கோட்டாசியர் தி.ஷர்மிளா, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, புனித வளனார் பள்ளி தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், நகராட்சி பள்ளி முதன்மை கண்காணிப்பாளர் ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.