ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 1.40 கோடியை தாண்டியது

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20  நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு

News image
Updated On :5 மார்ச் 2015, 1:10 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20  நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சத்தை தாண்டியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 40  லட்சத்து 48 ஆயிரத்து 825 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன  வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 762 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 7 கிராமும் கிடைத்தன.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 726 ம் வரப்பெற்றன.  இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.