விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் முறைகேடுகளை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் டெண்டர் பணிகளில் முறைகேடுகளை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 மார்ச் 2015, 1:14 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் டெண்டர் பணிகளில் முறைகேடுகளை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நகராட்சி பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்றது.  நகர்மன்ற தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலம் தொடர்பாக மன்றம் ஒப்புதல், புதிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  நகராட்சி பணியாளர் முன்பு நடைபெற்ற ஏலம் தொடர்பாக ஒப்புதல் கோரிய போது கவுன்சிலர்கள் பல்வேறு குழுக்களாக சேர்ந்து கொண்டு சிலர் ஒப்புதல் வழங்கலாம் என்றும், சிலர் ஒப்புதல் வழங்க முடியாது என்றும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

மேலும் நகராட்சி மன்ற அஜெண்டாவில் கொண்டு வரப்பட்ட பணிகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதிலும் இதே போல கவுன்சிலர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்.  முக்கியமாக கடந்த ஏலத்தின் போது நகராட்சி டோல்கேட் ஏலம் சுமார் ரூ 3.25 கோடிக்கு ஏலம் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு குழு தெரிவித்தது. அதற்கு  ஏலம் கேட்போரை விடவில்லை என்று காரணம் தெரிவித்தது. அப்போது, நகராட்சி ஆணையர் முஜிபுதீன் பதிலளிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டோல்கேட் வசூலுக்கு கட்டணம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. 

இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் கவுன்சிலர்கள் ஏலம் விடப்பட்ட போது கூடுதல் தொகையாக இருபத்தைந்து சதம் கட்டி மறுஏலத்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே என தெரிவித்தார்.  கவுன்சிலர்கள் கூறுவது போல மறுஏலம் நடத்தினால் இப்போதைய தொகையை விட ஏலத்தொகை குறைவாக போனால் அரசுக்கு பதில் வழங்க முடியாது. ஆகவே கடந்த முறை ஏலம் கேட்ட நபருக்கே மேற்படி இனம் விடப்படும் என தெரிவித்து விட்டு ஆணையர் மன்ற அரங்கை விட்டு வெளியேறினார்.  தொடர்ந்து கவுன்சிலர்கள் முருகபாண்டியன், கந்தசாமி, சுந்தர் உள்ளிட்ட பலரும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.  கவுன்சிலர்கள் முஜிபுதீன், ஷாகுல்ஹமீது, முருகபாண்டியன் ஆகியோர் நகராட்சி பேருந்து வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் பல இலட்சம் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது,

மேலும் மனித கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர்.  போதிய பதில் வராததால் முஜிபுதீன் மன்ற கூட்டம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தார்.   நகராட்சியில் கட்டிடம் கட்ட வழங்கப்படும் மானியத்தை நகரமைப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தாரா, அப்படி என்றால் அவர் ஆய்வு செய்த கட்டிடங்கள் விபரங்களை தெரிவிக்குமாறு கவுன்சிலர்கள் கேட்டபோது அதிகாரிகள் மவுனமாகவே இருந்தனர்.  பழனி ஆர்.எப்.ரோட்டில் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி முறைப்படி வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அகற்றப்பட்டது.  ஆனால் தற்போது எந்த கட்டணமும் இல்லாமல் சில்லிகடைகள், புரோட்டா கடைகள் என ஏராளமாக வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கவுன்சிலர் முஜிபுதீன் கேள்வி எழுப்பினார். இதனால் மன்றகூட்டம் கூச்சலும், குழப்பமுமாகவே நடைபெற்று முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.