கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர், சிதம்பரத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இன்ஸ்யூரன்ஸ் சட்டதிருத்த மசோதவை மக்களவையில் நாடாளுமன்ற மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், இன்ஸ்யூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26

News image
Updated On :9 மார்ச் 2015, 12:12 pm

ஜி.சுந்தரராஜன்

இன்ஸ்யூரன்ஸ் சட்டதிருத்த மசோதவை மக்களவையில் நாடாளுமன்ற மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், இன்ஸ்யூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதமாக உயர்த்தியுள்ளதை கண்டித்தும் கடலூர் மற்றும் சிதம்பரம் ஆயுள்காப்பீட்டுக்கழக கிளை அலுவலகங்களில் நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூர் எல்ஐசி அலுவலகத்தில் வேலை நிறுத்தம் செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.வெற்றிவேல் தலைமை வகித்தார்.  செயலர் ஆர்.வெங்கடேசன், கோட்ட இணைச் செயலர் டி.மணவாளன். முகவர்கள் சங்கம் சார்பில் தாண்டவகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சம்மந்தம், அதிகாரிகள் சங்கம் சார்பில் என்.பாலகிருஷ்ணன், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச்செயலர்எம்.மருதவாணன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் பேசினர்.

சிதம்பரம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் பா.யோகநாதன் தலைமை வகித்தார். க.கமலகாசன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர் த.கனகராஜ், ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் எல்.மணிகண்டன், முகவர் சங்கம் பி.குமார், சங்கமேஸ்வரன், சிஐடியு சார்பில் ராகவேந்திரன், ஆட்டோ சங்கம் சார்பில் எம்.முத்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.