கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இறுதிமுடிவெடுக்கும் அதிகாரம் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு: அமைச்சர் பா.வளர்மதி

தேர்தலில் பதவி வழங்குவது குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு. எனவே கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் அமைப்பு

News image
Updated On :22 மார்ச் 2015, 1:14 pm

ஜி.சுந்தரராஜன்

தேர்தலில் பதவி வழங்குவது குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு. எனவே கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் அமைப்பு தேர்தலில் மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக பேரூராட்சி, ஒன்றிய நகர நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் கடலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், தமிழக அமைச்சருமான பா.வளர்மதி பங்கேற்று சிதம்பரம் நகரச் செயலாளருக்கு போட்டியிடும் ரா.செந்தில்குமாரிடம் வேட்புமனுவை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

ஒருத்தருக்கு ஒரு பதவி என பொதுச்செயலாளர் வழங்கி வருகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ளவர்கள் மனு செய்ய முடியாது. கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு போட்டியிட மனு செய்ய முடியாது. கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவர் செய்யக்கூடாது, இவரை மாவட்டச் செயலாளர் தேர்வு செய்துள்ளார் என்பது கிடையாது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, மா.சந்திரகாசி எம்பி, நாக.முருகமாறன் எம்எல்ஏ, செல்விராமஜெயம் எம்எல்ஏ, சிதம்பரம் நகரச் செயலாலர் ரா.செந்தில்குமார், நகர பேரவை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், முன்னாள் மாவட்டச் செயலாளர்வி.கே.மாரிமுத்து, தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ சோமசுந்தரம், காஞ்சிபுரம் நகரமன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.