விராலிமலை அருகே தீவிபத்து: நெல்,கடலை மூட்டைகள் எரிந்து நாசம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே புதன்கிழமை ஏற்பட்ட மின்கசிவினால் வைக்ககோல் போரில் ஏற்பட்ட தீ, பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல், நிலக்கடலை மூட்டைகளில் பரவி தீயில்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே புதன்கிழமை ஏற்பட்ட மின்கசிவினால் வைக்ககோல் போரில் ஏற்பட்ட தீ, பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல், நிலக்கடலை மூட்டைகளில் பரவி தீயில் கருகின
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ரோட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் எம். கருப்பையா விவசாயி இவர் வயலில் விளைந்த நெல் மற்றும் நிலக்கடலை மூட்டைகளை, வீட்டில் மாட்டுத் தீவனத்திற்காக சேமித்து வைத்துள்ள வைக்ககோல்போர் அருகே அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வைக்ககோல்போர் மேலே செல்லும் குறைந்த அழுத்த மின் கம்பத்தின் ஒயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு அருகே இருந்த வைக்ககோல்போரில் தீபற்றி கொண்டது மளமளவென எரிந்த தீ அருகே இருந்த நெல் மற்றும் நிலக்கடலை மூட்டைகளில் பரவியது தகவலறிந்து வந்த கீரனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ப. மோகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவாதவாறு தீயை போரடி அணைத்தனர் இதில் ஆயிரக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள நெல், நிலக்கடலை மூட்டைகள் தீயில் கருகி நாசமாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...