கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணாமலைப் பல்கலைக்கு சிறப்பு நிதிஉதவி: ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு நன்றி

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 2015-16ம் ஆண்டிற்கு ரூ.110.57 கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய மக்கள் முதல்வருக்கும்,

News image
Updated On :27 மார்ச் 2015, 12:29 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 2015-16ம் ஆண்டிற்கு ரூ.110.57 கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய மக்கள் முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக பழைய நிர்வாகத்தால் ஏற்பட்ட சீர்கேட்டினால், நிதிசிக்கல் ஏற்பட்டது. ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் போராட்டத்தில் அபோதைய முதல்வர்
ஜெயலலிதா புதிய சட்டம் இயற்றி பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

மேலும் தமிழகஅரசு இடஒதுக்கீடு மற்றும் ஒற்றை சாளர முறையில் மாணவர் அனுமதி சேர்க்கை செயல்படுத்தி பெருமை அவருக்கு உண்டு. மார்ச் 25-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு நிதிஉதவியாக 2014-15
ஆண்டிற்கு ரூ.153.55 கோடியும், 2015-16 ஆண்டிற்கு ரூ.110.57 கோடியும் வழங்குவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிப்பயன், அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை, ஓய்வூதியர்களின் சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகள் எதுவும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும். 1996-ம் ஆண்டு வரையுள்ள ஆசிரியர்-ஊழியர்கள் எண்ணிக்கைகேற்பு அளிக்கப்படும் தொகுப்பு நிதியை, தற்போதுள்ள மாணவர்கள், துறைவாரியான படிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் 2014-ம் ஆண்டு வரை ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கைகேற்ப தொகுப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கடலூர், நாகை, அரியலூர் மாவட்ட மக்களின் நல்வாழ்வை பேணிக் காத்திட உள்நோயாளிகள் 1200 பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி கொண்டு ஆசியாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக
திகழும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடலூர் மாவட்ட அரசு தவைமை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகவும், அண்ணாமலைப் பல்கலைக்கு கீழ் இயங்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகவும் மாற்றும் விதமாக தமிழகஅரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் பல்கலைக்கழகத்தில் நிதிசிக்கல் தீரும் வரை சில ஆசிரியர்-ஊழியர்களை தமிழகத்தில் வேறு கல்வி நிறுவனம் மற்றும் அரசு துறைகளுக்கு தேவைப்படும் இடத்தில் குறிப்பிட்ட காலத்திற்ு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக நிதிசிக்கலை தீர்க்க ஒரு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என சி.மதியழகன் தெரிவித்தார். பேட்டியின் போது ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி, ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கர், ஊழியர் சங்க இணை பொதுச்செயலாளர் துரை, ஓய்வூதியர்கள் சங்க பொதுச்செயலாளர்கலியபெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.