சிதம்பரத்தில் முழுஅடைப்பு: அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன
சிதம்பரம் நகரில் விவசாயிகள் சங்கங்களின் முழுஅடைப்பை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.


சிதம்பரம் நகரில் விவசாயிகள் சங்கங்களின் முழுஅடைப்பை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சனிக்கிழமை முழுஅடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகரில் காய்கறி மார்க்கெட், நகைகடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைகடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடி கிடந்தது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. ஹோட்டல்கள், டீக்கடை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்ததால், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் உணவு கிடைக்காமல் மிகவும் அவதியுற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...