கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் முழுஅடைப்பு: அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன

சிதம்பரம் நகரில் விவசாயிகள் சங்கங்களின் முழுஅடைப்பை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

News image
Updated On :28 மார்ச் 2015, 12:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் விவசாயிகள் சங்கங்களின் முழுஅடைப்பை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சனிக்கிழமை முழுஅடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகரில் காய்கறி மார்க்கெட், நகைகடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைகடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து  அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடி கிடந்தது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. ஹோட்டல்கள், டீக்கடை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்ததால், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் உணவு கிடைக்காமல் மிகவும் அவதியுற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.