மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை: சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு
சிதம்பரம் அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.


சிதம்பரம் அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகே வடமூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை(70). இவர் டி.நெடுஞ்சேரி அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பெயர் கலைச்செல்வி. இவர்களது மூன்றாவது மகள் சத்யாவிற்கும், காட்டுமன்னார்கோயில் வடக்குவிருதாங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு திருமணமாகி ஹரிபிரசாத், விஜயபிரதாப் ஆகிய இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு சத்யா கோபித்துக் கொண்டு தந்தை அப்பாதுரை வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
இதனையடுத்து கணவர் செந்தில்குமார், மனைவியை அழைக்க சென்ற போது மாமனார் அப்பாதுரை, மாமியார் கலைச்செல்வி ஆகியோர் அவரை திட்டி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 29-5-2013 அன்று வடமூர் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த அப்பாதுரையை, செந்தில்குமார் மறைந்திருந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் படுகாயம் அடைந்த அப்பாதுரை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்து சிதம்பரம் விரைவு நீதிமன்ற வழக்கு நடத்தி வந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிவுற்று கூடுதல் மாட்ட அமர்வு நீதிபதி கிங்ஸ்லி கிருஷ்டோபர் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...