இலுப்பூர் அருகே தனியார் பேரூந்து மோதி வியாபாரி சாவு
விராலிமலை இலுப்பூர் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேரூந்து மோதிய விபத்தில் பெட்டிக்கடை வியாபாரி உயிரிழந்தார்.


விராலிமலை இலுப்பூர் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேரூந்து மோதிய விபத்தில் பெட்டிக்கடை வியாபாரி உயிரிழந்தார்.
இலுப்பூர் அருகேயுள்ள சாங்கிராப்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் ராஜேந்திரன்(40) விராலிமலை இலுப்பூர் சாலையில் நூகர்பொருள் வாணிபகழக கிட்டங்கி அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் இவருக்கு, திருமணமாகி ஆண், பெண் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் செவ்வாய்க்கிழமை மதியம் கடைக்கு தேவையான சாமான்கள் வாங்குவதற்கு இலுப்பூர் வந்து விட்டு விராலிமலை சாலை தாமரைக்குளம் அருகே திரும்பி வந்து கொண்டிருக்கையில், விராலிமலையில் இருந்து அன்னவாசல் நோக்கி சென்ற தனியார் பேரூந்து ராஜேந்திரன் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...