சிதம்பரத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் பெண்களிடம் தாலி சங்கிலி அறுப்பு சம்பவம்
சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை அதிகாலை கோலம் போடும் போது ஒரே நாளில் மூன்று இடங்களில் பெண்களிடம் 16 பவுன் மதிப்புள்ள தாலி


சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை அதிகாலை கோலம் போடும் போது ஒரே நாளில் மூன்று இடங்களில் பெண்களிடம் 16 பவுன் மதிப்புள்ள தாலி
சங்கிலி அறுப்பு சம்பவம் நடைபெற்றது. இதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.
சிதம்பரம் அம்பாலத்தாடி மடத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூரத்தி மனைவி சரோஜா(78). ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் திங்கள்கிழமை காலை கோலம்போடும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்மநபர்கள் அவரது கழுத்திலிருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். இதேபோன்று பள்ளிப்படை பொன்நகரில் வசிக்கும் ரஞ்சித்குமார் மனைவி சித்ராவிடம் (34) 7 பவுன் தாலி சங்கிலியும், வண்டிகேட் பெட்ரோல் பங்க் அருகில் வசிக்கும் சந்திரகாசு மனைவி பழனியம்மாளிடம் (65) 4 பவுன் தாலி சங்கிலியையும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் போலீஸாகர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தொடர் தாலி சங்கிலி அறுப்பு சம்பவத்தால், பெண்கள் பீதி அடைந்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...