வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை: ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி சாவு

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.

News image
Updated On :5 மே 2015, 10:54 am

ஷேக் அப்துல்காதர்

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.

மேலப்பாளையம் வெள்ளை கலீபாசாகிபு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் நியாஸ் (14). அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை நியாஸ் தனது நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றாராம். ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த நியாஸ் சூழலில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயங்கிய நிலையில் நியாசை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நியாஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சென்று மாணவன் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.