வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிளஸ் 1: நெல்லை மாவட்டத்தில் 95.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.  திருநெல்வேலி மாவட்டத்தில் 95.96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News image
Updated On :6 மே 2015, 7:06 am

ஷேக் அப்துல்காதர்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.  திருநெல்வேலி மாவட்டத்தில் 95.96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் புதன்கிழமை பிளஸ் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:  திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் 295 மையங்களில் தேர்வு எழுதினர். இதில் 17,744 மாணவர்கள், 19,916 மாணவிகள் உள்பட மொத்தம் 37,660 பேர் அடங்கும்.

 இதில் 16,636 மாணவர்கள், 19,506 மாணவிகள் உள்பட மொத்தம் 36,142 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.96 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.75 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.94 சதவீதமாகும்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 5066 மாணவர்கள், 6419 மாணவிகள் உள்பட 11,485 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,732 மாணவர்கள், 6,248 மாணவிகள் உள்பட 10,980 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.60 சதவீத தேர்ச்சி ஆகும்.

தென்காசி கல்வி மாவட்டத்தில் 5,371 மாணவர்கள், 6,825 மாணவிகள் உள்பட 12,196 மாணவர் தேர்வு எழுதினர். இதில் 5,010 மாணவர்கள், 6,684 மாணவிகள் உள்பட 11,694 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.88 சதவீத தேர்ச்சி ஆகும்

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 7,307 மாணவர்கள், 6,672 மாணவிகள் உள்பட 13,979 பேர் தேர்வு எழுதினர். இதில் 6,894 மாணவர்கள், 6,574 மாணவிகள் உள்பட 13,468 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.34 சதவீத தேர்ச்சி ஆகும்.

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து இம்மாதம் 20 ஆம் தேதி முதல் பெற்று அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணைத் தேர்வு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற தொகுப்பு மதிப்பெண் பட்டியல் இம்மாதம் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று மேல்நிலைத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மூலம் வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.