மாவட்ட அளவில் குறைந்த தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. நகராட்சி பள்ளியில் தேர்வு....


பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. நகராட்சி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
இப் பள்ளியில் தேர்வு எழுதிய 61 மாணவ மாணவியரில் 47 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 77 சதவீதமாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் பிற பள்ளிகள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம் வருமாறு:
எஸ்.அம்மாபட்டி அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 75 மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.3 சதவீதம். பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 57 மாணவர்களில் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.2 சதவீதம். பி.ராமச்சந்திரபுரம் அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 121 பேரில் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91 சதவீதம். கிருஷ்ணன்கோவில் அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 45 பேரில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98 சதவீதம். சுந்தரபாண்டியம் அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 61 பேரில் 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.3 சதவீதம்.
கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 89 பேரில் 69 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 78 சதவீதமாகும். ராஜபாளையம் அரசு (ஆ) மேநிப யில் தேர்வு எழுதிய 192 பேரில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.1 சதவீதம். ராஜபாளையம் அரசு (ம) மேநிப யில் தேர்வு எழுதிய 259 பேரில் 255 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.4 சதவீதம். சத்திரப்பட்டி அரசு (ஆ) மேநிப யில் தேர்வு எழுதிய 97 பேரில் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதமாகும். மகாராஜபுரம் அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 168 பேரில் 163 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97 சதவீதமாகும். சேத்தூர் அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 103 பேரில் 102 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99 சதவீதமாகும். சத்திரப்பட்டி அரசு மேநிப யில் தேர்வு எழுதிய 159 பேரில் 158 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.5 சதவீதமாகும். தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 136 பேரில் 128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94 சதவீதமாகும்.
கரிசல்குளம்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 45 பேரில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 80 சதவீதம். சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேநிப யில் தேர்வு எழுதிய 48 பேரில் 44 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92 சதவீதம். ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 61 பேரில் 47 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்.
அரசு உதவி பெறும் பள்ளிகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 201 பேரில் 195 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீதம். சி.எம்.எஸ். மேநிப தேர்வு எழுதிய 226 பேரில் 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87 சதவீதம். மங்காபுரம் இந்து மேநிப யில் தேர்வு எழுதிய 192 பேரில் 189 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.4 சதவீதம். எஸ்.ராமச்சந்திரபுரம் கலைமகள் மேநிப யில் தேர்வு எழுதிய 136 பேரில் 135 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99 சதவீதம். வத்திராயிருப்பு இந்து மேநிப யில் தேர்வு எழுதிய 290 பேரில் 283 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.5 சதவீதம். ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேநிப யில் தேர்வு எழுதிய 287 பேரில் 286 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99.6 சதவீதம். ராஜபாளையம் நாடார் மேநிப யில் தேர்வு எழுதிய 207 பேரில் 206 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99.5 சதவீதம்.
தளவாய்புரம் டி.என்.பி.எம்.என் (ஆ) மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 204 பேரில் 198 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீதமாகும். ஜமீன் கொல்லங்கொண்டான் நாடார் மேநிப யில் தேர்வு எழுதிய 75 பேரில் 70 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.3 சதவீதம். வத்திராயிருப்பு நாடார் மேநிப யில் தேர்வு எழுதிய 107 பேரில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீதம். மீனாட்சிபுரம் ஆர்.சி. மேநிப யில் தேர்வு எழுதிய 34 பேரில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீதம். ஸ்ரீவில்லிபுத்தூர் செயிண்ட ஜோசப் மேநிப யில் தேர்வு எழுதிய 77 பேரில் 75 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீதம். சோழாபுரம் பழனியப்பா மேநிப யில் தேர்வு எழுதிய 50 பேரில் 49 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98 சதவீதம்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 12 மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்கண்ட இரு பள்ளிகள் தவிர்த்த 10 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 32 பேரில் 28 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.5 சதவீதம். ஸ்ரீவில்லிபுத்தூர் செயிண்ட் ஆண்டனி மெட்ரிக் மேநிப யில் தேர்வு எழுதிய 23 பேரில் 19 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 83 சதவீதம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...