ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவர் மாவட்ட அளவில் 2-ம் இடம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில், பிளஸ் 2 தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.அருண் 1170 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில், பிளஸ் 2 தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.அருண் 1170 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இப் பள்ளியில் தேர்வு எழுதிய 198 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பள்ளி அளவில் முதலிடத்தையும் இப் பள்ளியின் மாணவர் ஆர்.அருண் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1170 ஆகும். இப் பள்ளியின் பி.ராஜ்குமார் 1162 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடத்தை பெற்றார். டி.எஸ்.நர்மதா மற்றும் டி.பிரதீப்குமார் ஆகியோர் 1158 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.
கணிதத்தில் 17 மாணவர்களும், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடத்தில் தலா ஒவ்வொரு மாணவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் ஆர்.அருணை பாராட்டி முதல்வர் சுதாகர் சான்றிதழம் மற்றும் பரிசு வழங்கினார்.
1200-க்கு 1150-க்கு மேல் 5 பேரும், 1100-1150 மதிப்பெண்களை 26 பேரும், 1050-1100 மதிப்பெண்களை 20 பேரும், 1000-1050 மதிப்பெண்களை 8 பேரும் பெற்றுள்ளனர். பள்ளியின் வளர்ச்சிக்கு முதல்வர் ஏ.சுதாகர் தலைமையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன், அரிமா சங்கத் தலைவர் கு.சக்திவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.குமாரவேல், பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, எஸ்.குணசேகரன் உள்ளிட்ட அரிமா சங்கத்தினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...