டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சி: போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் சிலர் தற்கொலை முயற்சி மேற்கொள்வது, அதிகாரிகளை பழிவாங்குதவற்கும், அரசிற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகவும் செய்யப்படுகிறது.

News image
Updated On :8 மே 2015, 9:23 am

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் சிலர் தற்கொலை முயற்சி மேற்கொள்வது, அதிகாரிகளை பழிவாங்குதவற்கும், அரசிற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகவும் செய்யப்படுகிறது.

தற்கொலைக்கு முயலும் அரசு ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து காமராஜ், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: அரசுப் பணியாளர்களுக்கென்று, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. தனக்கு மேல் பணிபுரியும் அலுவலர்கள், கீழ் உள்ள அலுவலர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டினாலோ, நடவடிக்கை எடுத்தாலோ, அவர்களை மிரட்டும் வகையில் தற்கொலை முயற்சியில் சில அரசு ஊழியர்கள் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் எந்த அரசு அலுவலகத்திலும் எந்தப் பணியும் நடைபெறாது. உயரதிகாரிகள் கீழ் பணிபுரியும் அலுவலர்களை வேலை வாங்கவே முடியாது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அரசு நிர்வாகம் முடங்கும்.

அரசு நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சில எதிர்கட்சிகள் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை ஊக்குவித்து வருகிறது.

தற்கொலை முயற்சி செய்யும் ஊழியர்களின் விவரங்களை நுண்ணறிவு பிரிவு போலீஸார், உளவுப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மையான நிலவரம் தெரியும்.

அரசையும், அரசு அதிகாரிகளையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மிரட்டும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் வழக்கு பதிவு செய்யப்படாமல் உள்ளது, இந்த அரசுக்கு எதிரான செயல்களை ஊக்குவிப்பதாக அமையும்.

அரசு நிர்வாகம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுதவற்கும், அரசு உயரதிகாரிகள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வதற்கும் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசிய அவசரமாக உள்ளது.

இதற்கு அரசு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்து, தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடமால் இருக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.