விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதம் அடைந்த குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.
நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி, காமட்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி. இவரது குடிசை வீடு மின் கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீ பற்றி எரிந்ததில் குடிசை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் நாசமாயின.
இது குறித்து தகவல் தெரிந்தவுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்க பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம், பாண்டிசெல்வி குடும்பத்தினரைச் சந்தித்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது கோல்டு அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.