புரிந்து கொண்ட அறிவுதான், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும்: டி.சி.எஸ். தலைவர்
புரிந்து கொண்ட அறிவுதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்று டி.சி.எஸ். தென்னிந்திய தலைவர் பட்டாபிராமன் கிருஷ்ணசாமி கூறினார்.


புரிந்து கொண்ட அறிவுதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்று டி.சி.எஸ். தென்னிந்திய தலைவர் பட்டாபிராமன் கிருஷ்ணசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2014-15-ம் கல்வியாண்டில் பி.டெக். முடித்துச் செல்லும் மாணவ மாணவியர் 1300 பேருக்கு 75 பிரபல நிறுவனங்களில் கிடைத்துள்ள வேலை வாய்ப்புக்கான பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி, பட்டாபிராமன் கிருஷ்ணசாமி பேசுகையில் கூறியதாவது: நீங்கள் அடைந்துள்ள வெற்றிக்கு உங்களது பெற்றோர் காரணம் என்பதை மனதில் இருத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்துவது தான் வெற்றி. இந்தக் கல்வி நிறுவனத்தில் உங்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். நீங்கள் இந்த உலகத்திற்கு புதிய அறிவியல் தொழில்நுட்பங்களைத் தர வேண்டும். அறிவை அறிதல் மட்டும் கூடாது. புரிதல் வேண்டும். புரிந்து கொண்ட அறிவுதான், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படும்
என்றார் அவர்.
நாஸ்காம் தலைவர் வி.உதயசங்கர் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: வேலை வாய்ப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. தகுதி இல்லை என்றால் இந்த பணி நியமன உத்தரவு கிடைத்திராது. கல்லூரி வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டாலும், இங்கிருந்த நட்பு தொடர வேண்டும். அதன் மூலம் அநேகருக்கு உதவி செய்ய வேண்டும். பணத்தால் செய்யக் கூடிய உதவியைவிட, குணத்தால் செய்யக் கூடிய உதவியே சிறந்தது.
எனக்கு யாரோ உதவி செய்தார்கள். நான் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன் என்று ஒவ்வொருவரும் நினைத்தாலே அடுத்தவர்களுக்கு நாம் மனதரா உதவி செய்ய முடியும் என்றார் அவர்.
வேந்தர் க.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது: நீங்கள் 4 ஆண்டுகள் உழைத்ததன் பலனை இன்று அடைந்துள்ளீர்கள். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இதுவரை படித்துள்ள சுமார் 70 ஆயிரம் பேர் சிறந்த பொறியாளர்களாக உலகெங்கும் உள்ளார்கள். இங்கு படித்துள்ள 90 சதவீதம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ளார்கள். நீங்கள் அடைந்த வெற்றிக்கு பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும். தாழ்மையாக இருக்க இருக்க வெற்றிப் படியின் மேலே நீங்கள் சென்று கொண்டே இருப்பீர்கள். இது தான் வெற்றியின் ரகசியம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில் வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன், அனைத்துத் துறை டீன்கள், துறைத் தலைவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...