எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: நெல்லையில் விநியோகம் தொடக்கம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, விழுப்புரம், தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம், செங்கல்பட்டு, தர்மபுரி, தேனி, திருச்சி மருத்துவக் கல்லூரிகள் உள்பட 19 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2555 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவிகிதம் அதாவது 383 இடங்களில் நுழைவுத் தேர்வு, அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் நிரப்பப்படும். எஞ்சியுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் 15 இடங்கள் போக 85 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேற்கண்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கை அளிப்பதற்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் எல்.டி. துளசிராம், விண்ணப்பம் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் நெப்போலியன், நிர்வாக அலுவலர் தேவகி, துணை நிர்வாக அலுவலர் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவப் பிரிவிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு 1,900 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. தேவையை பொறுத்து கூடுதலாக பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தினை பொதுப்பிரிவினர் ரூ. 500 செலுத்தியும், எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர் தங்களது சாதிச்சான்று ஆவணத்தை அளித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலக நாட்களில் தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும். இம்மாதம் 28 ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் அவர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 153 இடங்கள் உள்ளன. இதில் 28 இடங்கள் மத்திய அரசு ஒதுக்கீட்டு வழங்கப்படும். எஞ்சியுள்ள 135 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...