டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை ஐ.சி.டி. இணை உறுப்பினராக கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு

சென்னையில் உள்ள அகில இந்திய தகவல் மற்றும் தொடர்பு பயிற்சிக் கழகத்தின் இணை உறுப்பினராக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு

News image
Updated On :12 மே 2015, 12:33 pm

கோ.ஜெயக்குமார்

சென்னையில் உள்ள அகில இந்திய தகவல் மற்றும் தொடர்பு பயிற்சிக் கழகத்தின் இணை உறுப்பினராக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு இதற்கான நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஐ.சி.டி. டெரிடெரி மேலாளர் வி.பூர்ணபிரகாஷ், கல்வி நிறுவன உறவு மேலாளர் என்.நரேந்திரகுமார் ஆகியோரை துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.

மேலாளர் வி.பூர்ணபிரகாஷ், வேந்தர் க.ஸ்ரீதரனிடம் ஐ.சி.டி. இணை உறுப்பினருக்கான கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.

மேலும் அவர் கூறுகையில்: கலசலிங்கம் பல்கலைக்கழகத்தை ஐ.சி.டி.யின் இணை உறுப்பினராக தேர்வு செய்ததன் மூலம், இங்குள்ள மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயன்படும் செயல்பாடுகள் ஐ.சி.டி. சார்பில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். ஐ.சி.டி.யின் புதிய கண்டு பிடிப்பு மையம், ஆரெக்கிள் கணினி பயிற்சி மையம், ஐ.சி.டி. ஆராய்ச்சி மலரில் பேராசிரியர்களின் பங்கு, மாணவர்களுக்கு தொழிற்சாலை பயிற்சி முதலியவை வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில், வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன், நிதி காப்பாளர் இளமாறன், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.