தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

24 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழக அரசு எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Updated On :15 மே 2015, 3:20 am

தமிழக அரசு எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி என மொத்தம் 20 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

நான்கு நாள்கள் முடிவில் தமிழகத்தில் இதுவரை 24,606 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து இதுவரை 6,212 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18,394 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இதுவரை 3,800 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை மே 28-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி மே 29 ஆகும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.