டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை: தங்கத் தேர் இழுத்த அமைச்சர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்

News image
Updated On :16 மே 2015, 9:03 am

கோ.ஜெயக்குமார்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்தரபாலாஜி சனிக்கிழமை தங்கத் தேர் இழுத்தார்.

விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்று தமிழகத்தை அமைதி, வளமான பாதையில் மனநிறைவுடன் ஆட்சி செய்ய வேண்டியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், மகளிர் அணியின் சக்திகோதண்டம், வழக்குரைஞர்கள் எம்.ஜெகதீசன், ஏ.மங்களசாமி, கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் அறுசுவை உணவுடன் ஏராளமானோருக்கு அன்னதானம் நடைபெற்றது.

பின்னர் ஆண்டாள் சன்னதியில் உள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் அமைச்சர், சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.