வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்கத்தாலி திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூஜாரி அய்யானரப்பன் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் சனிக்கிழமை அதிகாலை சென்று பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் கழுத்திலிருந்த தலா 3 சவரன் மதிப்புள்ள 2 தங்கத்தாலிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.