வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் ரயில்வே ஊழியர் மின்சாரம் தாக்கி சாவு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

News image
Updated On :17 மே 2015, 6:52 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலி பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சங்கரபாண்டியன் (28). இவர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏசி மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதற்காக சங்கரபாண்டியன், ஏணி மூலம் ரயில் ஏறினாராம்.

ரயில் பெட்டியில் அமர்ந்தவாறு பணியில் ஈடுபட்டபோது, பெட்டிக்கு அருகாமையில் சென்ற மின்சார வயரில் சங்கரபாண்டியன் தொட்டு விட்டதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.