வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம்  3.28 அடி உயர்ந்து

News image
Updated On :17 மே 2015, 11:36 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம்  3.28 அடி உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை  44.29 அடியாக இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 13, சேர்வலாறு அணை 5,மணிமுத்தாறு அணை 17.2, ராமநதி அணை 5, கருப்பாநதி அணை 9, குண்டாறு அணை 8.2, அடவிநயினார் அணை 7, வடக்குப் பச்சையாறு அணை 2, நம்பியாறு அணை 2, கன்னடியன் அணைக்கட்டு 13.

பாளையங்கோட்டை 3, திருநெல்வேலி 1.3, சேரன்மகாதேவி 3, களக்காடு 6.4, தென்காசி 4, செங்கோட்டை 9, ஆய்க்குடி 15.2, அம்பாசமுத்திரம் 4, ராதாபுரம் 13, நான்குனேரி 7, ஆலங்குளம் 6.2, சிவகிரி 11.

நீர்வரத்து அதிகரிப்பு:

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 600 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 400 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 98 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 89 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் நிலவரம்:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.17 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடி, கடனாநதி அணை 56.20 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.29 அடி உயர்ந்து 44.29 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 35.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.