வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழை நீடிப்பு: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
Updated On :19 மே 2015, 10:51 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நிகழாண்டில் கோடையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மழையால் அக்னிநட்சத்திரம் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 10 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 4 மி.மீ மழையும், நான்குனேரியில் 2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 5.1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நண்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் மழை பெய்தது.

நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அணைகளுக்கு நீர்வரத்து இருந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,779 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 422 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும், ராமநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடியும், வடக்குப்பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 105 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 73.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 87.86 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.85 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 56.90 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 44.62 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடியாகவும்,வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 24 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 305 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.