சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Updated On :21 மே 2015, 1:01 pm

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் பொதுத்தேர்வு எழுதிய 45 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் மாணவன் சங்கர் 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவன் சதீஸ் 437 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவன் மணிகண்டன் 410 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் சி.அருளப்பன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி :

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 154 மாணவிகளில் 132 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.2 ஆகும். இதில் மாணவி பி.முத்துப்பிரியா தமிழ் - 96, ஆங்கிலம் - 95, கணிதம் - 97, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மதிப்பெண்கள் என மொத்தம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மாணவி பி.பத்மஸ்ரீ  தமிழ் - 97, ஆங்கிலம் - 94, கணிதம் - 96, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மதிப்பெண்கள் என மொத்தம் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

மாணவி எஸ்.ஹேமமாலினி 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் செ.மார்க்ரெட் சரோஜா, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.