டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வத்திராயிருப்பு ஏழை மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கோட்டையூரைச் சேர்ந்த ஏழை மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

News image
Updated On :21 மே 2015, 8:42 am

கோ.ஜெயக்குமார்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கோட்டையூரைச் சேர்ந்த ஏழை மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

கோட்டையூரைச் சேர்ந்தவர் பெருமாள்-சரஸ்வதி தம்பதியினரின் மகள் லோக பிரியதர்ஷினி. இவர் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத் தேர்வு எழுதினார். இத் தேர்வில் இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியலில் தலா 100 என மொத்தம் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாவதாக வந்துள்ளார்.

இவரை பள்ளியில் தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் ஆர்.சங்கரகிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

இந்த வெற்றி குறித்து மாணவி லோக பிரியதர்ஷினி தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், தான் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவராகி ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.