10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவர் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் மகன் மாரீஸ்வரன் (16). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் கரையில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 21-ம் தேதி வெளியான தேர்வு முடிவில் இரு பாடங்களில் அவர் தோல்வியடைந்திருந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்துள்ளார். சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...