இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்ததவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்ததவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகேயுள்ள மாரனேரி-பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் முத்து மகன் பால்சாமி (48). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். புதன்கிழமை வேலை முடித்து நாகபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே ஓடியதையடுத்து நிலை தடுமாறி பால்சாமி கீழே விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...