டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெயலலிதாவிற்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு

தமிழகத்தின் முதல்வராக 5 வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெ.ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கம் வாழ்த்துக்களையும்

News image
Updated On :24 மே 2015, 10:06 am

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தின் முதல்வராக 5 வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெ.ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவுடன், தமிழகத்தின் 5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, சிறப்பான முறையில் ஆட்சி செய்ய இறைவன் அருள்புரிய வேண்டும். இந்தக் காலத்தில் தமிழகம் மேலும் வளர்ச்சிப் பாதையில் சென்று அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிற்கு முன்மாதிரியான மாநிலமாக திகழ வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மக்களையும் நாட்டையும் அமைதி, செழிப்பு, வளமான பாதையில் வழி நடத்திச் செல்வார் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.