மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடும் கத்தரி வெயிலால் மக்கள் பாதிப்பு: வெறிச்சோடிய புதுவை சாலைகள்

அக்னி நட்சத்திரத்தின் உச்சம், கடுமையாக எட்டியுள்ளதால் புதுச்சேரியில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

News image
Updated On :25 மே 2015, 11:43 am

சுஜித்குமார்

அக்னி நட்சத்திரத்தின் உச்சம், கடுமையாக எட்டியுள்ளதால் புதுச்சேரியில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மேலும் மதிய வேளையில் வெளியில் நடமாடவே மக்கள் அச்சம் அடைந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். கோடை வெயிலை தொடர்ந்து அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான வெப்பச் சலனத்தால் சில நாள்கள் மழை பெய்தது. இதனால் கத்தரி வெயிலின் தாக்கம் சிறிதளவு குறைந்தது.

இந்நிலையில் மீண்டும் கடும் உச்சத்தை எட்டியுள்ள அக்னி நட்சத்திரம் புதுச்சேரியில் மக்களை வாட்டி வதக்கிறது. காலை 7 மணியில் இருந்தே வெயிலின் உக்கிரம் அதிகமாகி இருக்கிறது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. புதுச்சேரியில் திங்கள்கிழமை 102 டிகிரி வெயில் அளவு காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்த வெயிலின் உக்கிரம் இன்னும் 5 நாட்கள் நீடிக்கும் என மக்கள் நிம்மதி அடைந்தாலும், நான்கு நாட்களை கடப்பது மிக கடினமாக இருக்கும் என பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். வெயில் கொடுமையில் வாடிய மக்கள் மாலை வேளையில் கடற்கரைக்கு வந்து நள்ளிரவு வரை காற்று வாங்கி செல்கின்றனர். இதற்கிடையே அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் நான்கு நாட்கள் உள்ளது என்றும், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். கடலோர பகுதிகளில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.