அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீபாவளிப் பண்டிகை: பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு:தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.

News image
Updated On :5 நவம்பர் 2015, 9:35 am

கோ.ஜெயக்குமார்

தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு விருதுநகர்  மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.

தீபாவளிப் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசினைத் தவிர்த்து, விபத்தில்லா தீபாவளிப் பண்டிகையை அனைவரின் ஒத்துழைப்போடும் கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வானவெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்படைத் தவிர்க்கவும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.

பெரியர்கள் உடன் இருப்பது அவசியம்.பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக் கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.