பட்டாசு வசூல்: பெண் எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில் இலவசமாக பட்டாசு வசூல் செய்த பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் முதுநிலை கிரேடு 1 காவலர் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.









