விருதுநகர் மாவட்டத்தில் நவ.13-ல் அம்மா திட்ட முகாம்கள்
விருதுநகர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் நவம்பர் 13- தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


விருதுநகர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் நவம்பர் 13- தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களுக்குத் தேவையான அரசு உதவிகளையும், தேவையான அரசின் சான்றிதழ்களையும், நலத்திட்ட உதவிகளையும் எளிதில் பெறுவதற்கு அந்தந்த வட்டங்களுக்குட்பட்ட கிராமங்கள்தோறும் மண்டல அலுவலர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள் சுழற்சி முறையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று வருவாய்த் துறையின் சார்பில் குறைதீர்க்கும் முகாம் மக்கள் பிரதிநிதிகள், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் தி்டடங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், வருவாய் வட்டாட்சியரின் அதிகாரத்திற்குட்பட்ட நிலதாவாக்கள் மற்றும் குடிநீர், சாலை, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக அன்றைய தினமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் 13.11.15-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், பொன்னாங்கன்னியிலும், விருதுநகர் வட்டம் வாய்ப்பூட்டான்பட்டியிலும், அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடியிலும், காரியாபட்டி வட்டம் வையம்பட்டியிலும், திருச்சுழி வட்டம் ரெகுநாதமடையிலும் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அம்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து, முகாம் நடைபெறும் நாட்களில் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கேட்டு்க் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...