தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் பூக்கள் விலை கடும் உயர்வு

பூக்கள் வரத்து குறைந்ததால் புதுச்சேரியில் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விற்பனை ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

News image
Updated On :11 நவம்பர் 2015, 8:25 am

சுஜித்குமார்

பூக்கள் வரத்து குறைந்ததால் புதுச்சேரியில் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விற்பனை ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை மற்றும் அதன் தொடர்ச்சியாக அமாவாசை நோன்பு, நிகழ்ச்சியை புதுவையில் மக்கள் விமரிசையாக கொண்டாடுவர். நேரு வீதியில் உள்ள பெரியமார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர், வில்லியனூர், லாஸ்பேட்டை பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்குவது வழக்கமாகும்.

இந்நிலையில் புதுச்சேரியில் பூக்கள் உற்பத்தி இல்லாததால், பெங்களூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாகனங்கள்

மூலம் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி மற்றும் அமாவாசை நோன்புக்காக பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாஙகுவர்.

ஆனால் தொடர் மழையாலும், பூக்கள் வரத்து இல்லாததாலும், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரிலும் பலத்த மழை பெய்ததால் அங்கிருந்தும் புதுவைக்கு பூக்கள் வரவில்லை.

இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. பூக்களின் பழைய விலையும் தற்போது உயர்ந்துள்ள விலையும் கீழே றிப்பிட்டுள்ளவாறு அதிகரித்து விட்டன.

சாமந்தி ரூ.40-ரூ.300, மல்லி-ரூ.200-ரூ.600, முல்லை ரூ.160-ரூ.600, காட்டுமல்லி ரூ.200-ரூ.600, ரோஜா ரூ.80-ரூ.245, சம்பங்கி ரூ.60-ரூ.120, அரளி ரூ. 60-ரூ.150 என ஒரு கிலோவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளன.

அமாவாசை நோன்புக்கு படைக்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் கடும் விலையிலும் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பெரியகடை மார்க்கெட் பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது:

புதுவையில் பூக்கள் உற்பத்தி இல்லதால் வெளியூரில் இருந்து பூக்கள் வருகின்றன. தற்போது தொடர்ந்து 3 நாள்கள் மழையால் அங்கிருந்தும் பூக்கள் வரவில்லை. சிறிதளவே பூக்கள் வருகின்றன. பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வரத்து குறைந்து விட்டது. போதிய வரத்து இல்லாததால் விலையும் அதிகரித்து விட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.