லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: புதுவையில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு: பொதுமக்கள் கடும் பாதிப்பு
லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலியாக புதுச்சேரியில் காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலியாக புதுச்சேரியில் காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அழைப்பின்படி, புதுச்சேரியில் லாரிகள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 373 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும்
நாடு முழுவதும் உள்ள 373 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத டிடிஎஸ் வரியை ரத்து செய்ய வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இயக்கக் கூடாது என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்திருந்தது.
மத்திய அரசுடன் நடைபெற்ற லாரி உரிமையாளர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் லாரி உரிமையாளர்களின் நாடு தழுவிய அளவிலான காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரக்கணக்கான லாரிகள் ஓடவில்லை.
புதுச்சேரியில் உள்ளூர் பகுதியில் இருந்து காய்கறிகள் விளைச்சல் இல்லாத நிலையில் பெங்களூர், ஓசூர், திருச்சி, ஓட்டன்சத்திரம், கோயம்பேட்டில் இருந்து கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி போன்றவை லாரிகள் மூலம் வருகின்றன.
புதுவைக்கு 30 டன் வெங்காயம், 10 டன் உருளை உள்பட 100 டன் காய்கறிகள் லாரிகள் மூலம் தருவிக்கப்படுகின்றன. இங்கிருந்து மரக்காணம், கடலூர், அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு, வில்லியனூர், முத்தியால்பேட்டை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெங்களூர் லாரிகள் ஓசூரிலும், திருவண்ணாமலை, போன்ற ஊர்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் புதுவைக்கு காய்கறிகள் கொண்டு வருவது நின்று விட்டது. இதனால் வியாபாரிகள் தங்கள் சொந்த செலவில் வேன்கள் மூலம் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.
லாரிகள் மூலம் வந்தால் வாடகைக் கட்டணம் குறைவாகும். வேன்கள் மூலம் கொண்டு வந்தால் 2 மடங்கு வாடகை கட்டணம் கூடுதலாகும். இதனால் காய்கறிகள் விலையும் இரு மடங்காகிவிட்டது. காய்கறிகள் பழைய விலை-புதிய விலை:
கேரட்-ரூ.25-ரூ.40, பீட்ரூட்-ரூ.10-ரூ.20, பீன்ஸ்-ரூ.25-ரூ.30, உருளை-ரூ.14-ரூ.24,தக்காளி-ரூ.10-ரூ.20, சின்னவெங்காயம்-ரூ.25-ரூ.50, வெங்காயம்-ரூ.30-ரூ.40. காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டதால், மக்கள் தற்போது கத்தரி, வெண்டை, முருங்கை, கொத்தவரங்காய் போன்ற நாட்டு காய்கறிகளை அதிகம் வாங்குகின்றனர்.நாட்டு காய்கறிகளும் விலை உயர்வு
கத்திரி கிலோ விலை ரூ.15-ல் இருந்து ரூ.30 ஆகவும், முருங்கை விலை ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆகவும், வெண்டை விலை ரூ.5-ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்து விட்டது. இதுகுறித்து புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் சிவகுருநாதன் கூறியதாவது:
லாரிகள் வேலைநிறுத்த காலத்தில் புதுச்சேரி அரசே பாப்ஸ்கோ அல்லது குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் காய்கறிகளை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வர முன்பு ஏற்பாடு செய்தது. ஆனால் தற்போது அரசு இப்பிரச்னையில் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. காய்கறிகள் வரத்து சீராக இருந்தால் தான் விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...