/

பாலாற்றில் மணல் கடத்திய 11 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்திய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :10 அக்டோபர் 2015, 4:18 pm IST

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்திய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகறல் போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. இந்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது பாலாற்றில் இருந்து 11 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குருவிமலையைச் சேர்ந்த உதயன் (33), வெங்கடேசன் (35), காலூரை சேர்ந்த பாஸ்கர் (33), ஆனந்தன் (35), கிருஷ்ணன் (50), மகேந்திரன் (45), நாராயணன் (40), கண்ணன் (40), குமார் (53), ஆறுமுகம் (42), ராஜகுமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.