புதுவையில் அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 44-வது ஆண்டு தொடக்க விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநில செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொடியேற்றினார்.









