மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 தீபாவளிக் கூப்பன் விநியோகம்: அமைச்சர் ராஜவேலு வழங்கினார்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 தீபாவளி பரிசுக் கூப்பன்களை நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு வெள்ளிக்கிழமை வழங்கினார்.

News image
Updated On :30 அக்டோபர் 2015, 8:45 am

சுஜித்குமார்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 தீபாவளி பரிசுக் கூப்பன்களை நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு வெள்ளிக்கிழமை வழங்கினார்.

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடந்த 31.3.15 வரை பதிவு செயதுள்ள உறுப்பினர்கள் 25799 பேருக்கு ரூ.1000 தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பரிசுக் கூப்பன்களை அமைச்சர் ராஜவேலு வழங்கினார். தொழிலாளர் அதிகாரி (நலம்) வி.சகுந்தலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இப்பரிசுக்கூப்பன் வரும் நவம்பர் 8-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உள்பட) காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

மேற்கண்ட தேதிக்குள் பரிசுக்கூப்பன் பெறத் தவறியோர் 12.11.15 முதல் 31.1.16 வரை அனைத்து அலுவலக நாள்களிலும் சங்க அலுவலகத்தில் பெறலாம். தீபாவளி பரிசுக் கூப்பன் பெற வரும் உறுப்பினர்கள் கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

சங்கத்தால் வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை, இறுதியாக செலுத்திய சந்தா ஆண்டு ரசீது, உறுப்பினர் ஆதார் அட்டை மற்றும் நகலை கொண்டு வந்து பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.