தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மைசூர் பட்டு உற்பத்திப் பொருள்கள் தீபாவளி விற்பனைக் கண்காட்சி தொடக்கம்

கர்நாடக பட்டு தொழில்கள் கழகம் சார்பில் மைசூர் பட்டு உற்பத்திப் பொருள்கள் தீபாவளி விற்பனைக் கண்காட்சியை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :30 அக்டோபர் 2015, 8:55 am

சுஜித்குமார்

கர்நாடக பட்டு தொழில்கள் கழகம் சார்பில் மைசூர் பட்டு உற்பத்திப் பொருள்கள் தீபாவளி விற்பனைக் கண்காட்சியை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள விஜயேந்திரா ஓட்டலில் (பாலாஜி தியேட்டர் அருகே) வரும் நவம்பர் 2-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் பிரசித்தி பெற்ற மைசூர் பட்டு பொருள்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைசூர் கிரேப் புடவைகள், ஜார்ஜெட், பிளெயின் பிரிண்டட் புடவைகள், ஸ்கார்வ்ஸ், டைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக கடந்த 1974 ஆண்டுக்கு முன்பு மைசூர் பட்டு நெசவு தொழிற்சாலையில் நெய்யப்பட்ட பாரம்பரிய பட்டுப் புடவைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 25 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி

அனைத்து பட்டுப் பொருள்களுக்கும் 25 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் ஒவ்வொரு விற்பனைக்கும் வாடிக்கையாளருக்கு பரிசுக்கூப்பன் வழங்கப்படுகிறது. இயற்கை பட்டு நூலில் நெய்யப்பட்ட மைசூர் பட்டுச் சேலைகளில் தூய்மையான தங்கம் 0.65 சதவீதமும், வெள்ளி 65 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக பழமைய, நவீனத்துவம் கலந்து புடவைகள் நெய்யப்படுகின்றன. மைசூர் பட்டுக்கு என தனியாக புவிசார் குறியீட்டையும் கர்நாடக பட்டுத் தொழில்கள் கழகம் பெற்றுள்ளது. மேலும் மைசூர் பட்டுக்கு பல்வேறு சர்வதேச ஐஎஸ்ஓ தரச்சான்றுகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைசூர் பட்டுப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தொடங்கி வைத்தார். கர்நாடக பட்டுத் தொழில்கள் கழக மேலாண்மை இயக்குநர் நீலா மஞ்சுநாத், விற்பனை மேலாளர் பிரிமளான ராஜ், ஓட்டல் இயக்குநர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.