தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா 4-ம் தேதி தொடக்கம்: சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு தகவல்

புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது என சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2015, 8:22 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது என சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு தெரிவித்துள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுலா துறை, கைட் லைப் பவுன்டேஷன் சார்பில் இரண்டாவது ஆண்டாக தற்போது சர்வதேச காற்றாடித் திருவிழா நடத்தப்படுகிறது. வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இவ்விழா நடத்தப்படும். சுற்றுலா மேம்பாட்டுக்காகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வகையிலும் இது நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு 100-க்கு மேற்பட்ட பெரிய, சிறிய வகை காற்றாடிகள் விடப்படும். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் காற்றாடி தொழில்முறை குழுவினர் பங்கேற்கின்றனர்.

மேலும் காற்றாடி விழாவின் ஒரு பகுதியாக 9 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு காற்றாடி தயாரித்தல் பயிறசிப் பட்டறை, காற்றாடி தயாரித்து பறக்க விடுதல், காற்றாடி கண்காட்சி, வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, மாணவர்களுக்கான காற்றாடி கவிதைப் போட்டியும் நடத்தப்படுகிறது.

4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமி காற்றாடி திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.10 லட்சத்தை சுற்றுலா துறை ஒதுக்கி உள்ளது. வெற்றி பெறுவோர் பரிசுகளும் அளிக்கப்படும் என்றார் ராஜவேலு. கைட் லைப் பவுண்டேஷன் நிர்வாகி ராஜேஷ் நாயர் கூறியதாவது:

பல்வேறு வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்படும். 90 மீ உயரம் வரை காற்றாடிகள் பறக்கவிடப்படும். 18 காற்றாடி விடும் தொழில்முறை குழுக்கள் பங்கேற்கின்றன. சிறுவர்கள் பயிற்சிப் பட்டறையில் அனுமதி இலவசமாகும். காற்றாடி திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும்.  இ-மெயில் முகவரிfoundation000gmail.compondytourism000gmail.com, அல்லது 09895455115, 9488084667-ல் தொடர்பு கொண்டு 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலாத்துறை செயலர் மிகிர் வரதன், இயக்குநர் முனியசாமி, சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் வையாபுரி மணிகண்டன் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.