தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொழிலாளர் துறை பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.பிரேமதாசன் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

News image
Updated On :5 செப்டம்பர் 2015, 6:06 am

சுஜித்குமார்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொழிலாளர் துறை பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.பிரேமதாசன் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக மத்திய, மாநில அரசுகள் கொண்டாடி வருகின்றன. ஆசிரியர்களை கெüரவப்படுத்தும் வகையில் அனுசரிக்கப்பட்டு ஒரு சில ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதோடு தன் கடமை முடிந்து விட்டதுபோல் அரசு எண்ணுகிறது.

ஆசிரியர்களின் பல நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது அரசின் முரண்பட்ட நிலைப்பாட்டையே தெரிவிக்கிறது. குறிப்பாக புதுச்சேரியில் பணியாற்றும்

ஆசிரியர்களுக்கு பிக்சேஷன்  (ஊண்ஷ்ஹற்ண்ர்ய்) இல்லாமல் முதுநிலை ஊதியம் பெறும்  ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏசிபி, எம்ஏசிபி வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை கல்வித்துறையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதே போல் ஆசிரியர்களுக்கு ஒரு மாதத்துக்கு மருத்துவப்படியாக ரூ.75 வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதை உயர்த்த வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியமாக ரூ.5000 பெற்றுக் கொண்டு முன் ஆரம்பப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுடைய கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என ஓராண்டாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் என கூறியும் பலனில்லை.

அரசுத்துறைகளிலியே பணிபுரியும் ஆசிரியர்கள் நிலை இவ்வாறு இருக்கும்போது, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் பாராமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

குறிப்பாக கல்வித்துறை செயலகத்தின் 21.7.2008-ல் வெளியிடப்பட்ட அரசாணை மூலம் உருவாக்கப்பட்ட ஆசிரிய் காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழிலாளர்துறை பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பல பள்ளிகளில் அமுல்படுத்தப்படாமல் உள்ளது. எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்காக அல்லும்பகலும் பாடுபடும்

ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மூலமே அர்த்தமுள்ளதாக அமையும், முதல்வர், கல்வி அமைச்சர், அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரேமதாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.