வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :19 ஏப்ரல் 2016, 9:25 am IST

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி

ரயில் எண் 00603: மே 6, 13 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 00602: மே 8,15 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுகல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம்

ரயில் எண் 00613: மே 6, 13 ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

  ரயில் எண் 00612: மே 8,15 ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.