ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மனைவியை வழிமறித்து வெட்டிக் கொன்ற கணவன்: விராலிமலை அருகே நடந்த வெறிச்செயல்

விராலிமலை அருகே இன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து கணவன் அறிவாளல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :20 டிசம்பர் 2016, 6:21 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே இன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து கணவன் அறிவாளல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விராலிமலை அருகே உள்ள கத்தலூர் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் எம். கருப்பையா(70) இவர் தெய்வானை(60), நாகம்மாள்(28) என அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து உள்ளார்.

இந்நிலையில், தனித்தனியாக வசிக்கும் இவர்கள் ஒரே குடும்ப அட்டையை பயன்படுத்தி மாதம் ஒருவர் குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்கி கொள்வது என தீர்மானித்து இதுவரை நடைமுறை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெய்வானையிடம் இருந்த குடும்ப அட்டையை கடந்த டிச, 19-ம் தேதி நாகம்மாள் வாங்கி வந்து விட்டாராம். 

இதையறிந்த கருப்பையா குடும்ப அட்டையை ஏன் வாங்கினாய் என கேட்டு நாகம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு 100 நாள் திட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்த நாகம்மாளை வீரம்பட்டி அருகே வழிமறித்து அறிவாளால் வெட்டியுள்ளார் இதில் நிகழ்விடத்திலேயே நாகம்மாள் உயிரிழந்தார்.

தகவலறிந்த விராலிமலை போலிஸார் சம்பவ இடம் சென்று கருப்பையாவை கைது செய்தனர். சடலத்தை பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.