எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை அருகே வாலிபர் கொலையில் இருவருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு புதன்கிழமை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2016, 9:46 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு புதன்கிழமை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள குருந்தாவனம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (49). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாராம். 

ஆலங்குளம் அருகே ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த கரையாடி மாடசாமி என்பவரின் சகோதரர் முருகன், பெரியசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாராம். இந்த நிலையில் முருகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. 

முருகன் சாவுக்கு பெரியசாமிதான் காரணம் எனக் கருதி கரையடி மாடசாமி தரப்பினர் 17.12.2007 அன்று பாவூர்சத்திரம்-சுரண்டை பிரதானச் சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் வைத்து பெரியசாமியை கொலை செய்தனராம்.
இவ்வழக்கில் சுரண்டை அருகேயுள்ள இடையர்தவணை பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ரமேஷ் (36), சமுத்திரக்கனி மகன் மயில்ராஜ் (38), ஆனந்தராஜ்,  மற்றொரு மாடசாமி, சாமி என்ற ஆறுமுகச்சாமி, கரையடிமாடசாமி, திருமலைவேலு ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்புடைய கரையடிமாடசாமி, திருமலைவேலு ஆகியோர் மதுரையில் நீதிமன்றத்துக்கு சென்றபோது, பெரியசாமி தரப்பினர் கொலை செய்தனராம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வைத்து சாமி என்ற ஆறுமுகச்சாமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரியசாமி கொலை வழக்கினை விசாரித்த திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ணன், புதன்கிழமை குற்றவாளி ரமேஷ், மயில்ராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜ், மற்றொரு மாடசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.