மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 8:33 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களுக்கு கடுóம பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸôல் பரவும் ஆர்போ வைரஸ் தொற்றுநோயால் காய்ச்சலால் கர்ப்பிணிகள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் 40 லட்சம் பேர் வரை ஜிகா வைரஸôல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிóல் ஜிகா வரைஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் தடுப்பு நடவடிக்கை

இதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் தலைமையில் பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், சுகாதாரத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய கிராமப்புறப்புற சுகாதார திட்ட இயக்குநர் காளிமுத்து, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குநர் ஜெயந்தி, துணை இயக்குநர்கள் குமாரவேலு, ரகுநாதன், சுதாகோயல், அல்லிராணி, டாக்டர் சுந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் சுகாதார இயக்குநர் டாக்டர் ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது புதுச்சேரியில் ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இந்நோய் ஏடிஎஸ் வகை கொசு கடித்தல்,  ரத்தபரிமாற்றம், உடல்உறவு மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. மிதமான காய்ச்சல், தோல்கடித்தல், தசை மற்றும் மூட்டுவலி, உடல்சோர்வு, தலைவலி உள்ளிட்டவை நோயின் அறிகுறிகள். கர்ப்பிணி தாய் மூலம் கருவை பாதித்து பிறக்கும், குழந்தைகளுக்கு தலை சிறுத்து போதல், மூளை வளர்ச்சி பாதிப்பு நரம்பு மண்டலம்

செயலிழப்பு போன்றவை உண்டாகும்.

இதற்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லைல. சுகாதாரத் துறை சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஜிகா வைரஸ் பாதிப்பு குறிóத்து ஆய்வு செய்ய புணே மற்றும் தில்லியில் தான் ஆய்வக வசதி உள்ளது. புதுச்சேரியில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு செய்யும் வசதி இல்லை. இதனால் கோரிமேட்டில் உள்ள பூச்சியியல் நோய் கட்டுப்பாட்டு ஆய்வு மையம் மூலம் சோதனை செய்யப்படும். இதற்கான சிறப்பு கருவி 10 நாள்களில் அங்கு தருவிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் துறையின் 130 ஊழியர்கள், சுகாதாரத்துறையின் 80 ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவர். 100 கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் கழிவுநீர் தேங்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்படும். அரசு பொது மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு கண்காணிப்பு

மேலும் நகர, கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் பாதிப்ப்பு குறித்து கண்காணிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத் துறையில் தொடர்பு எண் 2247228-ஐ காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றார் ராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.