ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே சுமையுந்து கவிழ்ந்து விபத்து 5 மாத கைகுழந்தை உள்பட 30 -க்கும் மேற்பட்டோர்  பேர் காயம்

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மத்தியம் சுமையுந்து கவிழ்ந்த விபத்தில் 5 மாத கைகுழந்தை உள்பட 30 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :10 ஜூலை 2016, 9:01 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மத்தியம் சுமையுந்து கவிழ்ந்த விபத்தில் 5 மாத கைகுழந்தை உள்பட 30 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விராலிமலை அடுத்துள்ள மாதுராப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகள் சிவகாமியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தங்கவேலுவின் உறவினர்கள், மாதுராப்பட்டியைச் சேர்ந்த 30 -க்கும் மேற்பட்டோர் வாடகை சுமையுந்தில் திருச்சி மாவட்டம் வளநாடு அருகேயுள்ள செல்லம்பட்டிக்கு சென்றனர். வண்டியை விராலிமலை அருகேயுள்ள பாலப்பட்டியைச் சேர்ந்த அம்மாசி மகன் வீரமணி(23) ஓட்டினார்.

 இந்தநிலையில் வேன் கொடும்பாளூர் அருகேயுள்ள நந்திகோயில் மேட்டை கடக்கு முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.  இதில், பலத்த காயங்களுடன் 5 மாத பெண்குழந்தை கோகுலம் மற்றும் சின்னு மனைவி சரசு(39) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து.

மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விபத்து குறித்து விராலிமலை காவல் துணை ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.