திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து சாவு
திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பிராட்டியூர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சுகுமாரி (19). இவர் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சுகுமாரி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தாராம்.
இதனால் விரக்தியடைந்த அவர் திங்கள்கிழமை மாலை யாருமில்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சுகுமாறியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாரி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...